எழுத்தாணி தமிழ்க் கலை இலக்கிய சங்கம், திருவள்ளூர் தமிழ்ச்சங்கம்,தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் என்ற முப்பெரும் சங்கங்கள் இணைந்து முப்பெரும் விழாவாக சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
இதில் பெரும்புலவர் செம்மங்குடி துரையரசன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வின் வரவேற்புரையாளராக கவிமாமணி,பாவலர் எழுத்தாணி சேவூர்அரிராசு அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் சொல்லின் செல்வர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆவடிக்குமார் அவர்களுக்கு தமிழ்மனச் செம்மல் என்ற உயரிய விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.
இதில் தமிழ்ப் பெரும்புலவர்களால் தமிழன் வடிவேலாகிய எனக்கு “தமிழ்ச் சுவடி” என்ற உயரிய விருதையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.
இந்த முப்பெரும் விழாவில் முனைவர் கா.மு.சேகர் (மேனாள் இயக்குனர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) புலவர் தாமரை பாண்டியன். (துணை இயக்குனர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) சமூக சேவையை திருமதி சிவகாமி,பேராசிரியர் சாந்தகுமாரி ,பாவலர் ராமச்சந்திரன், மருத்துவர் ஜீவரேகா தலைவர் தென் சென்னை தமிழ் சங்கம்) சேக்கிழார் அப்பாசாமி தலைவர் (தமிழ்ப் பட்டறை) பொதுநலச் சேவகர் தாம்பரம் அரிச்சந்திரன் அல்லிமுத்து போன்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
இதில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நல்லாசிரியர் திருமதி. ஹேமாவதி அவர்கள் கவிதையோடு தொகுத்து வழங்கியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த முப்பெரும் விழாவின் நன்றியுரையை முனைவர் இரதிகுமாரி அவர்கள் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.