பாடியநல்லூர் ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர்
சித்தர் பீடத்தில் அன்னாபிஷேகம் மற்றும் 18 சித்தர்களுக்கு சிறப்பு
கலசாபிஷேகம்
நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வீ.எம். ஜி பேலஸ் பின்புறம்
ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர்
சித்தர் பீடத்தில் அன்னாபிஷேகம் மற்றும் 18 சித்தர்களுக்கு சிறப்பு
கலசாபிஷேகம்
வெகுவிமர்சையாக சித்தர் அடியான் ஜெ. பூபாலன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியையொட்டி காலை 6 மணி முதல் 10 மணி வரை 18 சித்தர்களுக்கு கலசபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது பின்னர் யாக சாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த கலச நீரை கொண்டு
ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர் சிவபெருமானுக்கு
மற்றும் மூர்த்திகளுக்கும் அபிஷேகம்
நடைபெற்றது,இதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் ,பால், தயிர், தேன் ,பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது .பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேற்று கடனைப் பூர்த்தி செய்தனர் .முடிவில் அனைவருக்கும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்த அன்னத்தையும் மற்றும் அறுசுவை உணவை
பிரசாதமாக வழங்கப்பட்டது.
மாதந்தோறும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெறுகின்றது
மற்றும் அம்மாவாசை பௌர்ணமி அன்று சிறப்பு யாகசாலை பூஜை காலை 10 மணி முதல் நடைபெறுவது உண்டு இதனை தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஆலயத் தொடர்புக்கு
9444461348,9566219548. வாட்ஸ் அப் 9940344531