பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன் பொன்னேரி தொகுதியில் கொட்டும் மழையிலும் மக்கள் குறைதீர்க்கும் ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வருவதால் பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர்

Spread the love

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன்
பொன்னேரி தொகுதியில் கொட்டும் மழையிலும் மக்கள் குறைதீர்க்கும் ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வருவதால் பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெகநாதபுரம், மாளிவாக்கம்,ஆமூர்,மாதவரம், நெடு வரம்பாக்கம், ஆண்டார்குப்பம், உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் மக்கள் குறைதீர்க்கும் ஆய்வுப் பணிகள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு முதியோர் உதவித்தொகை ,இலவச வீட்டுமனைப்பட்டா ,ஜாதி சான்றிதழ் , உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப் பெறாத சிலருக்கு விரைவில் தங்கள் பகுதியில் உள்ள பொன்னேரி இணை வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும்
வி.ஏ.ஓ அதிகாரி மூலம் அனைவருக்கும் திட்ட உதவிகள் கிடைக்கப்பெறும் என கூறினார்

பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பலராமன் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடமாடும் ரேஷன் கூடிய விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்தார்

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கிராம ஊராட்சிகளில் மக்கள் குறைதீர்க்கும் ஆய்வு பணிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்ததுடன் பாராட்டி வருகின்றனர்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம் பொதுக்குழு உறுப்பினர் பொண்ணுதுறை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் உட்பட பலர் பங்கேற்றனர்…

Social media & sharing icons powered by UltimatelySocial