பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஆய்வு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Spread the love

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்
சிறுணியம் பலராமன்
மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஆய்வு
மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம்,கொண்டகரை, வெள்ளிவாயல் சாவடி,
சுப்பா ரெட்டி பாளையம், நெய்தவாயல், நாலூர், மேலூர் உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளில்
322 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி
சட்டமன்ற உறுப்பினர் பலராமன் வழங்கி பேசுகையில்
பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை வருவாய்த்துறையினர் அனைத்தையும் நிறைவேற்றி வருவதை போன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பொன்னேரி தொகுதிக்கு
மகளிர் கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், முகத்துவாரம் திட்டம் என அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக பெருமிதம் தெரிவித்த அவர் சுப்பாரெட்டிபாளையம் கிராமமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கொசஸ்தலை ஆற்றில் பாலம் மற்றும் சாலை அமைக்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி தலைவர் ராகேஷ், மீஞ்சூர் தமிழ்ச்செல்வம், கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வழக்கறிஞர் பொன்னுதுரை, அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எம் டி ஜி வடிவேல், கூட்டுறவு சங்க தலைவர் ஒன்றிய கவுன்சிலர் பானு பிரசாத், கிருஷ்ணாபுரம் வினோத், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மோகன் வடிவேல், மகளிரணி சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

.

Social media & sharing icons powered by UltimatelySocial