பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவர்

Spread the love

தேவர் பிறந்தது
மறவர் இனம்
அவர்புகழ்ப் பரப்பியதோ
அனைத்துலக இனம்.

முத்து இராமலிங்கமாகி
எம்மதமும் சம்மதமாய்
எத்திசையும் புகழ்மணக்க
வாழ்ந்தமறவ தேவஇனம்.

தேசியமும் தெய்வீகமும்
தமதிரு கண்களாக்கி
நேசமதைத் தன்னுயிராய்
மேற்கொண்ட கருணைஇனம்.

சூலுற்ற அன்னை
காலமான போது
பாலூட்டிய அன்னை
இஸ்லாமிய இனம்.

கற்றுக் கொடுத்ததும்
ஊட்டி வளர்த்ததும்
பெற்றவர்க்கு இணையாக
கிருத்துவ இனம்.

வாழும்போதே தேவருக்கு
நேர்த்தியாய் சிலையமைத்து
அழகுபார்த்துப் போற்றியது
கள்ளர் இனம்.

தேவரைப் பற்றிய
முழு வரலாற்றை
அவனிக்கு உணர்த்தியது
அகமுடையார் இனம்.

சொற்பொழிவுகளின் தொகுப்பு
நூல் வெளியீடாக
ஏற்புடைத் தாக்கியது
நாயக்கர் இனம்.

அரசியல் துறையில்
அறிமுகம் செய்து
உரமூட்டிய வகையில்
முதன்மைகொண்டது முதலியார்இனம்.

மேடைச் சொற்பொழிவில்
சிம்மமென முழங்கவைத்து
படையெனத் தொண்டர்சேர்த்தது
செட்டியார் இனம்.

தேவருக்கு முதன்முதலில்
பிறந்தநாள் கொண்டாடி
உவகையிலே திளைத்தது
பர்மியர் இனம்.

இசையால் சிறப்பித்து
ஆடலும் பாடலுமாய்
திசையெங்கும் புகழ்ப்பரப்பி
போற்றிக்களித்தது நாடார்இனம்.

தேவர் மறைவின்பின்
சிலைவைத்துக் கொண்டாடி
நாவன்மைப் போற்றியது
பிள்ளைமார் இனம்.

சட்ட சபையினிலே
திருவுருவப் படம்வைக்க
திட்டமிட்டு வென்றது
வன்னியர் இனம்.

பாராளு மன்றத்தில்
சிலைவைக்கும் நோக்கினிலே
போராடி வென்றது
பிராமணர் இனம்.

நேத்தாஜி விடுதலைப்படைக்கு
தேவரின் கட்டளைஏற்று
புத்துணர்வோடு தமிழகத்தில்
பெரும்படையாய்த் திரண்டு
சத்தியத்தை நிலைநாட்ட
ஏறுநடைப்போட்டது தமிழர்இனம்.

தேவர் பிறந்தது
மறவர் இனம்
அவர்புகழ்ப் பரப்பியதோ
அனைத்துலக இனம்.

நேற்று முத்துராமலிங்கத் தேவர்
பிறந்த தினம் மற்றும் மறைந்த தினம்.

கவிஞர் இரா.சண்முகம்
பரணம்பேடு. திருவள்ளூர் மாவட்டம்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial