அறிவுத் தீபம் ஏந்துவோம் !

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பரணம்பேடு கவிஞர் இரா.சண்முகம்
.

அறியாமை இருளகற்றி
பிஞ்சு உள்ளங்களில்
அறிவுஒளி ஏற்ற
தமிழன்னைத்தாள் பணிந்து
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

மூடப்பழக்க வழக்கங்கள்
எவ்வுருவில் இருந்தாலும்
அடியோடு வேரறுத்து
பகுத்தறியும் பண்புக்காய்
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

சுற்றுச்சூழல் பராமரிப்பு
உடற்கல்வி வாழ்க்கைக்கல்வி
கற்றுத்தரும் பாடங்களை
ஏற்கும் வகையினிலே
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

வேளாண்மைத் தழைத்திட
செயற்கை இடரகற்றி
வளமான விளைவுக்கும்
விவசாயி நலனுக்குமாய்
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

பேராசைப் பூதங்கள்
பலிகொண்ட மரங்களை
சீராய்ப் பன்மடங்காய்
மீண்டும் விதைத்து
இயற்கை செழித்திட
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

இயற்கையை வெல்ல
செயற்கை நினைத்ததால்
இயல்புகள் மாறிய
பேரிடர் வென்றிட
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

வன்முறைக் கும்பல்களின்
கொலைக்கொள்ளைக் கற்பழிப்பு
கொன்றுகுவித்திடும் தீவிரவாதம்
இனம்மத காழ்ப்புணர்வெதிர்த்து
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

எங்கும்ஊழல் எதிலும்ஊழல்
ஊழல்ஊற்றின் ஊழித்தாண்டவம்
ஏழையின் வாழ்வோ
நிராசையின் விளிம்பில்
நேர்க்கொண்ட நிலைமைக்காய்
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

மொழிஇனம் மதத்தால்
மக்கள்வேறுபட்டு வாழ்ந்திடினும்
வேற்றுமையில் ஒற்றுமையை
கட்டமைத்துக் கொண்டாட
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

நாட்டுப் பற்றில்
மனிதப் பண்பில்
மனிதநேயம் மலர்ந்து
சுற்றமும் நட்புமாய்
அன்பு தழைத்தோங்க
அறிவுத்தீபம் ஏந்துவோம் !

அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கவரைப்பேட்டை பரணம்பேடு

கவிஞர் இரா.சண்முகம்
செல் எண். 9283241143

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial