
சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்டசோழவரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பி.கே.பாலன் அவர்கள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.இதில் சோழவரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.கார்மேகம் , திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் குணசேகரன், மாவட்ட புரட்சித்தலைவி பேரவை துணை தலைவர் எம்.மாணிக்கம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பாலமுருகன், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


இதனைத் தொடர்ந்து சோழவரம் ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் பி. கே. பாலன் அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.