தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் நலச் சங்க தலைவர் அன்பரசன் சென்னையில் செய்தியாளரிடம் பேட்டியளித்தார்
அப்போது அவர் கூறுகையில்
விரைவில் மதுபான பார்கள் திறக்க அனுமதி அளிக்காவிட்டால் வரும் 28 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளூக்கு மேல் பூட்டு போடும் போராட்டம் நடைபெறும்.
சங்கத் தலைவர் அன்பரசன் தெரிவித்தார்
சென்னை முகப்பேர் சத்யா நகரில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய அவர்,
பார் திறக்காததால் பார் நடத்தும் உரிமையாளர்கள் 2 பேர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்..
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி திங்கள் கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை தெரிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பார் திறக்காமல் கட்டிடத்திற்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும்,
டாஸ்மாக் நிர்வாகத்திற்கு விற்பனை அடிப்படையில் 2 சதவீதம் செலுத்துவதாகவும் தெரிவித்த அவர் இந்த பாரில் பணிப்புரிந்து வரும் 7 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
பார் திறக்க அனுமதி வழங்க வேண்டும். தவறினால் வரும் 28 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு மேல் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.