நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று.
இப்படம் பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகி அதிகளவிலான பார்வையாளர்களை பெற்றது.
மேலும் கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அசுரன்.
இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களின் பேராதரவை பெற்றது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்நிலையில் தற்போது இந்த இரண்டு திரைப்படங்களும் சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது, ஆம் Golden Globe Awards-ல் வரும் ஜனவரி மாதம் இந்த இரண்டு திரைப்படங்களும் திரையிட பட உள்ளது.
இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.