சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாட்டு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கி அரசு ஆண்கள் பள்ளியில் 58 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 96 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார்.
சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே கர்ணாகரன் முன்னிலை வகித்தார்.
ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லீலாவதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரா. மகேஸ்வரி ஆகியோர் முன்னதாக வரவேற்புரையாற்றினர்.
இதில் ஒன்றியக் கவுன்சிலர் சுகவேணி முருகன், சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனி கிருஷ்ணன், துணைத் தலைவர் அபிஷா பிரியதர்ஷினி ஜெகன், பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் சிவா, பி.வி. எத்திராஜ், வழக்கறிஞர் டிசைன் ராஜ் மற்றும் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் இசை பயிற்சி ஆசிரியர் சுபா தனது மாணவிகள் மூலம் நடன போட்டி பாட்டு போட்டி நடைபெற்றது.