


சர்வதேச சிலம்பாட்ட கழகம் சார்பில் நடந்த ஆன்லைன் சிலம்பாட்ட தனித்திறமை போட்டிகளில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சி. பா. ஆதித்தனார் சிலம்ப கலை கூட மாணவர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒரு தங்கம். மூன்று வெள்ளி. 6 வெங்கலம் என பத்து பதக்கங்கள் பெற்றுள்ளனர். பதக்கங்கள் பெற்றவர்களுக்கு செங்குன்றம் அருகில் உள்ள எம்.ஏ.நகர் எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழுமம் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு பள்ளியின் முதன்மை செயல் அதிகாரி.ஜி.பால்செபாஸ்டின் தலைமை தாங்கினார். ஆசான் ஜப்பான் சண்முகம். பயிற்சியாளர்கள்.தமிழரசன். கமலக்கண்ணன்.முன்னிலை வகித்தனர்.
சிலம்பகலைக்கூடதலைவர்.ஆர்.முருககனி வரவேற்றார். செங்குன்றம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.கே.சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற வர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை யை முன்னிட்டு கேக் வழங்கப்பட்டது.மூத்தபயிற்சியாளர். முடிவில் ஏ.வைகுண்டபெருமாள் நன்றி கூறினார்.