
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வீ.எம்.ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் சோமவாரம் மற்றும் கார்த்திகை மாதம் ஐந்தாம் வாரத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மூலவர் சிவபெருமானுக்கு 108 சங்கு அபிஷேகம் சித்தர் அடியான் ஜெ.பூபாலன் தலைமையில் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியை ஒட்டி பக்தர்கள் அவர்கள் கைகளால் சிவபெருமானுக்கு சங்கு அபிஷேகம் சிறப்பாக செய்து தங்கள் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர் .பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் அனைவரும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உச்சரித்தபடி சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில்
முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது

