பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியின் இரண்டாம் வாரத்தில் நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற பட்டார். அதனை தொடர்ந்து ஆஜீத் ஏவிக்ஷன் ப்ரீ பாஸ் பயன்படுத்தி வீட்டிலிருந்து வெளியேறாமல் இருந்தார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், “பாலாஜி முருகதாஸ் எல்லோரையும் அம்மி அரைக்க விடுறேன்” என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சக போட்டியாளர்கள் அவரை மாறி மாறி தீட்டியுள்ளனர், இதை வைத்து பார்க்கும் போது அமைதியாக இருந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது.