திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் அனைத்து தெய்வங்களை கொலு வைத்து தினமும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை மங்கள இசையுடன் சித்தர்கள் பீடத்தில் மகளிர் அணி குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டு முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டு வந்ததுஇறுதி நாளான அக்டோபர் 26-ம் தேதி சிறப்பு யாகசாலை பூஜையுடன் மங்கள இசை முழங்க மகிஷாசுரமர்த்தினி சம்ஹாரத்துடன் இனிதே நடைபெற்றது .இதனைத் தொடர்ந்துசிறப்பு மகா தீபாரதனை நடைபெற்றது .முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் உணவு பிரசாதத்துடன் தாம்பூல வழங்கப்பட்டது