சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுநாயக்கன் பழங்குடி நகர் வர பிரசாத் நகரில் அமைந்துள்ள அருள்மிகு இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் 26 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதில் ஆலய தலைவர் கீழ்மங்கலம் கே.முருகேசன், செயலாளர் கே.என். எம்.குமார் பொருளாளர் கு.வெ.க. மணிகண்டன் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம் அம்மனுக்கு காப்பு கட்டி தினந்தோறும் சிறப்பு அலங்காரம் பூஜைகள்,பால்குடம், ஆலமரம் முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து கங்கை திரட்டுதல், சிறப்பு அபிஷேகம், அம்மன் கரகம் திருவீதி உலா,சாத்துப்படி கரகம், அக்னி கொப்பரை திருவீதி உலா, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி மாபெரும் அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் காப்பு கட்டிய 136க்கு மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர்.இதில் ஆலய துணைத் தலைவர்கள் கே. முருகன்,கே. பாண்டியராஜ்,கே.என்.எம்.மாணிக்கம்,கே. பழனிவேல் ராஜ்,பி. சக்திவேல், துணைச் செயலாளர்கள் கே. முருகவேல்,கே. ஆறுமுகம்,கே. முத்துச்சாமி,எஸ். விஜயகுமார்,கே.என். எம்.வெங்கடேசன்,எம்.
வேங்கையன் மற்றும் ஆலய அன்னதான குழுவினர்கள் கே.என்.எம் . வெங்கடேசன், செயலாளர் எம். வேங்கையன், பொருளாளர் பி. சக்திவேல்,எம். முருகன்,எம்.ராஜேஷ், கே.என்.எம். மணிகண்டன்,எம். விஜயகுமார்,எம். சரவண பெருமாள்,ஏ. சாந்தகுமார் (எ) சிலம்பு உள்ளிட்ட ம. சுரேஷ்குமார், ஆலய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.