யுவகலை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் செங்குன்றம் அருகே வடகரை அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் சிலம்ப மாணவர்கள் 200 க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு ஒரே நேரத்தில் தீப்பந்தம் சுற்றி யூனிக்கோ புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றனர்.
இந்த சாதனை நிகழ்ச்சியை யுவ கலை ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ரவி ராஜா ஏற்பாட்டில் சென்னை புளியந்தோப்பு சரக உதவி ஆணையர் அழகேசன் செங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் கலந்துகொண்டு துக்கி வைத்தனர்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பத்தில் இருபுறமும் தீப்பந்தம் ஏந்தி 20 நிமிடம் சுற்றி யூனிக்கோ புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றனர். இதனை யூனிகார் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் இயக்குனர் சிவராமன் கேடயமும் சான்றிதழையும் வழங்கினார்.
பண்டைய காலங்களில் குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை ஆகிய ஐவகை நிலங்களில் பாலையில் மட்டும் கலை நிகழ்ச்சிகளுக்கும் உணவு பண்டங்களை சுடுவதற்கும் நெருப்பை பயன்படுத்தியதை நினைவு கூறும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு அஸ்டடோ அக்காடா செயலாளர் புவனேஸ்வரி தலைவர் திலீப் புகழ் வடகரை முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் துணைத் தலைவர் நாராயணசாமி பயிற்சியாளர்கள் பார்த்திபன் ஜெஸ்ஸி நியூட்டன் முருகன் நிர்மல் கமல்நாத் கண்ணதாசன் ஜனனி கவிதா பழனிமுத்து மனிஷா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.