திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடியநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ந.ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி ஊராட்சி மன்ற தலைவர் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்திற்கு ஊராட்சி சேர்த்த பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்ற இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு விதமான கோரிகளை பொதுமக்கள் முன் வைத்தனர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தருவதாக ஊராட்சி மன்ற தலைவர் ந.ஜெயலட்சுமி நடராஜன் உறுதி அளித்தார்.இதில் துணைத் தலைவர் பிரியதர்ஷினி சரவணன் வார்டு உறுப்பினர்கள் முத்து கண்ணன், ராணி லட்சுமணன், சிவகாமி, ராஜ் வேலு ,தேவி சுரேஷ், வளர்மதி ராஜேஷ் பிஸ்மில்லா வேலு . கமுருன்னிசா. வசந்தி வாணி கிராம நிர்வாக அலுவலர் ஜாகிர் உசேன் ஊராட்சி செயலர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.