திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பெருங்காவூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுவீட்டி கோபி தலைமையில் நடைபெற்றது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி ஊராட்சி மன்ற தலைவர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழு தாய்மார்கள் உட்பட பலர் கலந்துகொண்டு பல்வேறு வகையான கோரிக்கைகளை முன் வைத்தனர் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுவீட்டி கோபி உறுதி அளித்தார். இதில் துணைத் தலைவர் சுகாசினி சரவணன், வார்டு உறுப்பினர்கள் பாஸ்கரன், சுதா அருள், நாகு, சிலம்பரசன், புவனேஸ்வரி, சுபத்ரா சந்திரன், தேவகி, வெங்கடேசன், ஊராட்சி செயலர் அபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்