சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சியில் நேதாஜி நகர் அப்துல் கலாம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் விழாவும் பால்குட விழாவும் ஆலய ஸ்தாபகர் முரளி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் கலந்துகொண்டு இந்த நிகழ்வை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வை முன்னிட்டு காலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அலமாதி அருள்மிகு எச்சாத்தம்மன் ஆலயத்தில் இருந்து
110 க்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அருள்மிகு ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மனுக்கு பக்தர்கள் கரங்களால் பால் அபிஷேகம் மற்றும் பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் திருத்தேரில் பவனி வருத்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதியம் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
இந்த அன்னதானத்துக்கு உபயோதாரர்கள் தினேஷ் பாபு, கோகுல்நாத்.
இதில் ஆலய நிர்வாக குழுவினர்கள் கே.தினகரன், எம்.மோகன், பி. விநாயகமூர்த்தி, எஸ். கோபி, ஜெ.ஆனந்தபாபு, ஏ.கண்ணன், ஏ.இளங்கோவன், ஆர். செந்தில்குமார், எஸ்.வேணுகோபால்,டீ.அருஞ்சுனைமுத்து, என்.தனசேகரன் வி.சிவசக்தியன் மற்றும் கிராம பொதுமக்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.