கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தொற்றின் தாக்கத்தை குறைக்க வேண்டி, தமிழக அரசு முழு ஊரடங்கிற்க்கு உத்தரவிட்டிருந்தது. அதனால், மக்கள் வேலை வாய்ப்பின்றி தங்கள் வாழ்வாதாரம் இழந்து இருந்த சூழ்நிலையில், அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 4 ஆயிரம் நிவாரண தொகையும், நிவாரண மளிகைப் பொருட்களையும் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, மாதவரம் சட்டமன்ற தொகுதி, சோழவரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, நல்லூர் ஊராட்சியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதியால் வாழ்வாதாரம் இழந்த நல்லூர் ஊராட்சி மக்களுக்கு ஆட்டந்தாங்கல் நியாயவிலை கடையில் தமிழக அரசு வழங்கும் இரண்டாம் கட்ட நிவாரணமான, 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கும் நிகழ்ச்சி நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி, சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில்
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு கொரோனா இரண்டாம் தவனை நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி பாலகிருஷ்ணன் உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்