தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தபட்டதிலிருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களும் , தனியார் அமைப்புகளும், தன்னார்வலர்களும் இணைந்து முன்களப்பணியாளர்களுக்கு பல நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
முன்கள பணியாளர்களான பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு
சென்னை அண்ணாநகர் ரோட்டரி சங்கம் மற்றும்
சேவா இஸ் குட் தொண்டுநிறுவனம் சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அலுவலத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் தமிழ்செல்வன், சேவா இஸ் குட் தொண்டுநிறுவனத்தின் நிர்வாகி ரம்யா, லதா மற்றும் அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். ஆர். ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்.
இதுகுறித்து சேவா இஸ் குட் தொண்டு நிறுவனத்தில் நிர்வாகி ரம்யா கூறுகையில் :
ஊரடங்கு பிற்பிக்கப்பட்ட முதல் இன்று வரை சுமார் 15லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை ஏழை, எளிய, மக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு வழங்கி உள்ளோம்
இன்று முன்கள பணியாளர்களான ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கும் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது மிகவும் பெருமையாக கருத்துகிறோம்.
ஊரடங்கு முடியும் எங்கள் சேவை தொடரும் என்று கூறினார்.