ஒரே நேரத்தில் பத்து படங்களை எடுக்கும் டி .ராஜேந்தர் மிரண்டுபோன தமிழ் திரைப்பட துறையில் உள்ளவர்கள்
ஒரு காலத்தில் தாய்மார்களின் ஆதரவைப் பெற்று ஆயிரம் நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்களில் பெரும்பாலும் டி ராஜேந்தர் இயக்கிய படங்களாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு பெண்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இருந்தது.
அதுமட்டுமில்லாமல் வழக்கமாக வந்த சினிமா பாணியை மாற்றி அடுக்குமொழி வசனம், அட்டகாசமான சண்டை காட்சிகள் என தன்னுடைய படங்களில் ரசிகர்களைக் கவருவதற்கான அனைத்து விஷயங்களையும் வைத்திருந்தார்.
டி ராஜேந்தர் அறிமுகப்படுத்திய நடிகைகள் பலரும் அதன் பிறகு முன்னணி நடிகைகளாக வலம் வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமலாவை சொல்லலாம். அதன் பிறகு தன்னுடைய மகனான சிம்புவை வைத்து பல படங்களை இயக்கினார்.
இன்று அவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீராசாமி.
இந்நிலையில் மீண்டும் படம் இயக்க ஆர்வம் காட்டும் டி ராஜேந்திரன் ஒரே நேரத்தில் பத்து படங்களை தயாரிக்கவும், அதில் சில படங்களை இயக்கவும் முடிவு செய்துள்ளாராம். புதுமுக நடிகர்கள், இயக்குனர்கள் யாராக இருந்தாலும் வாய்ப்பு கொடுத்தே தீருவேன் என அடம் பிடிக்கிறாராம்.
முன்னணி தயாரிப்பாளர்களே படம் தயாரிக்க யோசிக்கும் நிலையில் டி ராஜேந்தர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது
தமிழ்த் திரைப்படத் துறையில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.