சென்னை பாடியநல்லூர் லயன்ஸ் சங்க முப்பெரும் விழா

Spread the love

சென்னை பாடியநல்லூர் லயன்ஸ் சங்க துவக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா என முப்பெரும் விழாவாக பாடியநல்லூர் ஊராட்சி மொண்டியம்மன் நகரில் அமைந்துள்ள ஆல்ஃபா நெக்ஸ்ட் ஜென் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
லயன்ஸ் சங்கத்தின் கொடி வணக்கத்தை பாடியநல்லூர் லயன்ஸ் சங்க பொருளாளர் கோபிநாத்,  லயன்ஸ் சங்க குறிக்கோளை தமிழ்ச்செல்வி, லயன்ஸ் அறநெறியை நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் ஆகியோர் வாசித்தனர்.


இந்நிகழ்ச்சிக்கு புழல் மனிதநேய லயன்ஸ் சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜா யாதவ் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். 
மாவட்ட ஆளுநர் டி.ராஜபாண்டியன் சென்னை பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 
முதல் நிலை துணை ஆளுநர் ஆர்.ஸ்ரீதரன், சென்னை பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான தலைவராக ஜி.பாலாஜி, செயலாளராக செய்திப்பார்வை கா.ஷண்முகசுந்தரம், பொருளாளாராக கோபிநாத் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். 
இரண்டாம் நிலை துணை ஆளுநர் பி.வி. ரவீந்திரன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.
புதிதாக தலைவர் பொறுப்பேற்றுக் கொண்ட ஜி.பாலாஜி ஏற்புரையாற்றினார். 
டி.துளசிங்கம், பி.மணிசேகர், கே.சீனிவாசன், ஜி.வடிவேலன், எம்.டி.நந்தகுமார், இரா.ஏ.பாபு, பாபு முனியாண்டி, டி.மணிகண்டன், டி.கோபி, டாக்டர் ஆர்.முனுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் பாடியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி நடராஜன், கைலாஷ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் பிஎன்கே. கிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சுரேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் பாடியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி நடராஜன், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத்தின் கௌரவ உறுப்பினராகவும் இணைக்கப்பட்டுள்ளார்.
எஸ்.நாகராணி, பிரியா பாலாஜி, டி.ராஜன், எம்.பீலிக்கான், கே.ஏ.டி. அன்சாரி, எஸ்.குமார், நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், எஸ்.சமீர் அன்சாரி, கே.புருஷோத்தமன், யு.ஸ்ரீதர், எம்.அன்சர் பாத்திமா, எஸ்.ஜுபைபா, ஆர்.கிருபாவதி, கே.நாகவல்லி, பி.கவிதா, அமீர் ஹம்சா, ஜெர்சி, எஸ்.அபிராமி, எஸ்.திவ்யா ஆகியோர் சென்னை பாடியநல்லூர் லயன்ஸ் சங்க உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.
சங்கச் செயலாளர் கா.ஷண்முக சுந்தரம் நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 
இந்நிகழ்வில் லயன்ஸ் சங்கத்தின் கல்வி அறக்கட்டளைக்காக ரூ. 5000மும், குழந்தைகளின் கல்விக்காக ரூ. 2000மும் வழங்கப்பட்டது. பெண் ஒருவருக்கு தையல் தொழில் செய்வதற்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial