
அறிஞர் அண்ணா 113 வது பிறந்தநாளையொட்டி செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கரை பட்டு பகுதியில் இயங்கி வரும் அறிவுகடல் திருவள்ளூவர் அறக்கட்டளை தலைவர், அமமுக மாதவரம் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், சைதை வேளாண் கூட்டுறவு சங்க துணை தலைவர். தீர்த்தக்கரைபட்டு கே.அந்தோணி இல்லத்தில் கே.அந்தோணி தலைமையில் அறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் அமமுக கட்சி புழல் ஒன்றிய பொருளாளர், தீர்த்தக்கரை பட்டு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தூ.விமலநாதன், அமமுக புழல் ஒன்றிய இணை செயலாளர் அ.கோபால், புழல் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் மு.விநாயகம் , திருவள்ளுவர் அறக்கட்டளை உறுப்பினர்கள் இன்ஜினியர் மா.திலீப் ஆனந்த், மருத்துவர் தி.ரம்யா எம்பிபிஎஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர் முடிவில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.