மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி புழல் பர்ணபாஸ் படத்திறப்பு நிகழ்ச்சி

Spread the love

சமீபத்தில் மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி புழல் பர்ணபாஸ் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கதிர்வேடு மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளரும் முன்னாள் புழல் ஒன்றிய குழு தலைவருமான புழல் பர்ணபாஸ் படத்திறப்பு விழா நிகழ்ச்சி. கதிர்வேட்டில் அமைந்துள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லயன் டி. ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செங்குன்றம் நகர தலைவர் எஸ். கோபி. கே. ஆர். வி எடுக்கேஷனல் டிரஸ்ட் நிறுவனர் தொழிலதிபர் கே.ஆர்‌.வெங்கடேசன், பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial