



திமுக கழகத்தின் சார்பில் சென்னை வட கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் கிராமத்தில் மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் #எஸ்சுதர்சனம் அவர்கள் தலைமையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சார பரப்புரையில் நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் #ஐலியோனி அவர்கள் சிறப்புரையாற்றினார். இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான #மீவேகருணாகரன் முன்னிலை வகித்தார்.



இதில் ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், சீனிவாசன், ராஜி, வீரம்மாள், துரைவேல், மாவட்ட கவுன்சிலர் கீதா அரசு, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.