பாடியநல்லூர் ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் தை மாத கிருத்திகை திருவிழா

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வீ.எம்.ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி
தை மாத கிருத்திகை திருநாளை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு யாகசாலை பூஜை ,சிறப்பு ஆராதனை ,சிறப்பு வழிபாடுகள்
சித்தா் அடியான் குருஜி. ஜெ. பூபாலன் அவா்கள் தலைமையில்
நடைபெற்றது.

இந்நிகழ்வை முன்னிட்டு காலை 7 மணி முதல் 10 மணி வரை யாகசாலை பூஜை நடைபெற்றது இதனை தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமானுக்கு
பால், தயிர் ,தேன் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது


பின்னர் வந்திருந்த பக்தர்கள் அவர்கள்
கோரிக்கையை நிறைவேற வேண்டி அர்ச்சனை செய்தும் அகல் தீபம் ஏற்றியும் பக்தர்கள் முருகப்பெருமானிடம் வழிபாடு செய்தனர்.

முடிவில்
வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial