மஹாளய அமாவாசை முன்னிட்டு பாடியநல்லூர் ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் சித்தர் அடியான்
ஜெ. பூபாலன் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.நிகழ்ச்சியையொட்டி சிறப்பு யாகசாலை
பூஜை நடைபெற்றது. இந்த யாக சாலை பூஜையில் பக்தர்கள் அவரவர் வேண்டுதலை மனதில் நினைத்துக்கொண்டு வெற்றிலையில் எழுதி யாகசாலை அக்னி குண்டத்தில் போட்டார்கள். இதைதொடர்ந்து மூலவர் சிவபெருமானுக்கு, பால், தயிர், தேன் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர்
சிவன், அம்மன், விநாயகர், முருகர் தெய்வங்களுக்கு
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதமாக வழங்கப்பட்டது.