



சென்னை மாதவரம் அடுத்த செங்குன்றத்தில் மார்க்கெட் அருகில் உள்ள கன்னி செட்டியார் திருமண மண்டபத்தில். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செங்குன்றம் நகரம், புழல் ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் செங்குன்றம் நகரச் செயலாளர் ஆர்.ஜெய் கணேஷ், புழல் ஒன்றிய செயலாளர் எம்.துளசிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் புழல் ஒன்றிய தலைவர் என். கனகராஜ், செங்குன்றம் நகரத் தலைவர் வி. குணசேகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.





இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் எல்.எல். நாராயணன், பாமக கட்சி முன்னோடிகள் தங்கவேல் நாயக்கர் , லோகநாத நாயக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.சிவப்பிரகாசம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஞானபிரகாசம், ஆகியோர் கலந்து கொண்டு செங்குன்றம் நகர புதிய நிர்வாகிகளையும் புழல் ஒன்றிய நிர்வாகிகளையும் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் அறிமுகம் செய்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். பின்னர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தீவிரமாக , திண்ணைப் பிரச்சாரம் செய்தல், அதிகளவில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், சமூக ஊடக பிரிவு மூலம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்த பல்வேறு மக்கள் பணிகளை பொதுமக்களிடையே பரப்புரை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி சிறப்புரையாற்றினர்.



இதில் செங்குன்றம் நகரத் தலைவர் வி. குணசேகரன், புழல் ஒன்றிய தலைவர் என்.கனகராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ. மணிகண்டன், செங்குன்றம் சுற்று வட்டார சங்கத் தலைவர் கி. பழனி, செயலாளர் எம். பாஸ்கரன், ராஜா, குப்பன், சிவனேசன் புழல் ஒன்றிய நிர்வாகிகள் ஆர். வேலு,ஏ.விஜயகுமார், டி. அருணகிரி,கே.ரகு, எம். ரமேஷ், இளைஞர் அணி செயலாளர் பி. சிவசங்கர்,எம்.தரணி, கே.எம்.சஞ்சய் ராஜன், கோ. ஏழுமலை, பிரகாஷ், மற்றும் செங்குன்றம் நகர பொறுப்பாளர்கள் சேகர், திருநாவுக்கரசர், நாகராஜ், ரவி, பாபு, ஜெயச்சந்திரன் பாலு மற்றும் பாமக அனைத்து சொந்தங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.