செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் சமுதாய நலக்கூடத்தில் சென்னை சோசியல் – பாடியநல்லூர், தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கங்கள், விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றம், சங்கரா நேத்ரலயா மருத்துவமனை, ரெட்ஹில்ஸ் ஸ்ரீசஞ்சனா கிளினிக் இணைந்து இலவச கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், சென்னை சோசியல் லயன்ஸ் சங்க பொருளாளர் பயாஸ் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புழல் ஒன்றிய திமுக செயலாளரும் சென்னை சோசியல் லயன்ஸ் சங்க முதல் நிலை தலைவருமான வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், புழல் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கலாவதி நந்தகுமார், செங்குன்றம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தெய்வானை கபிலன், அருணகிரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்து மூக்கு கண்ணாடி, இலவச மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
இதில் லயன்ஸ் மாவட்டத் தலைவர் ஜி.பாலாஜி, சிங்கிலிமே முகம்மது, வார்டு உறுப்பினர்கள் ஆனந்திநாகராஜன், தர்மிரவி, மாரி, அருணாதேவிசீனு, மாரியம்மாள்நரசிம்மன், சத்தியசீலன், நிலவழகிஇனியன், ரதிசீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மகேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் சார்பில் 87 பேருக்கு இலவசமாக கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. 42 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடியும், 22 பேர் இலவசமாக கண் ஆபரேசனுக்கும் தேர்வு செய்யப்பட்டனர். ஸ்ரீசஞ்சனா கிளினிக் சார்பில் 80க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக உயரம், எடை, சர்க்கரை நோய் பரிசோதனை, பொது மருத்துவம் பார்க்கப்பட்டு இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
விளாங்காடுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 50,000த்திற்கும் மேற்பட்ட கையுறைகள் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் வழங்கப்பட்டது.