


செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம், விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றம், அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடை பெற்றது.







சென்னை சோசியல் லயன்ஸ் சங்க வட்டார தலைவர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் வரவேற்றார்.
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கப் பொருளாளர் பயாஸ் உசேன், வட்டாரத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம், மாவட்டத் தலைவர் ஜி.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆளுநர் பி.வி.ரவீந்திரன், புழல் ஒன்றிய திமுக செயலாளரும் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் முதல் நிலை தலைவருமான வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்தனர்.
பின்னர் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் 25க்கும் மேற்பட்டவருக்கு இலவசமாக கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் புழல் ஒன்றிய துணை பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலாவதி நந்தகுமார், பேரூராட்சி கவுன்சிலர் தெய்வானை கபிலன், வார்டு உறுப்பினர்கள் ஆனந்திநாகராஜன், தர்மிரவி, மாரி, அருணாதேவிசீனு, மாரியம்மாள்நரசிம்மன், சத்தியசீலன், நிலவழகிஇனியன், ரதிசீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலர் மகேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.