
சென்னை செங்குன்றம் அடுத்த விளங்காடு பாக்கம் ஊராட்சியில் பள்ளிக் குப்பம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அறப்பளீஸ்வரர் உடனுறை கற்பகரச்சாம்பிகை ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கயிலை ஜெகநாதசாமி குடும்பத்தினரால் நடத்தப்பட்டது. இதில் விளாங்காடு பாக்கம் துணைத் தலைவர் கலாவதி நந்தகுமார் ஆலய நிர்வாகிகள் நந்தகுமார் கிரிதரன் ராஜேஷ் நரேந்திரன் ராஜசேகர் கோவிந்தசாமி ஜெயச்சந்திரன் உதயகுமார் வெங்கடேசன் மோகன் மணிகண்டன் மகளிர் இந்திராணி அம்மா கல்யாணி ரமணி ஜெயந்தி லதா, அமுலு ராதிகா பூர்ணிமா ஹேமா வரலட்சுமி சுமதி பிரியதர்ஷினிகாஞ்சனா கங்கா கௌரி மஞ்சுளா சரிதா கிருஷ்ணவேணி பிரமிளா அண்ணாச்சி அம்மா சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு விநாயகர் சிவன் பார்வதி அம்மன் முருகர் மற்றும் பல்வேறு தெய்வங்கள் கொலு வைத்து நாள்தோறும் பக்தி பாடல்கள் பாடப்பட்டு படையல் படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. கடைசி நாள் அன்று அனைவருக்கும் சக்கரை பொங்கல் மற்று பல வகையான பிரசாதங்கள் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை அமெரிக்காவில் இருந்தபடி கைலை ஜெகநாதசாமி குடும்பத்தினர் கண்டு களித்தனர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கைலை ஜெகநாத சுவாமிகள் மகன் ராஜா என்கின்ற சண்முகநாதன் கிராமத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் ஆலயத்திற்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் பல்லிக்குப்பம் இந்திராணி அம்மா ஹேமா ராதிகா பூர்ணிமா குடும்பம் சார்பாக பக்தர்களுக்கும் கடைசி நாள் அன்று வெள்ளியால் ஆன நாணயங்கள் கொடுக்கப்பட்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.