
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் அன்பும் அக்கறையும் நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அன்பும் அக்கறை அறக்கட்டளை தலைவர் ஜான் வெங்கடேசன் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வெகு சிறப்பாக செய்திருந்தார். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆக்கிலா ர. லோகநாதன், பால் கோவிந்த், பால் குணசீலன், ரூபன் செல்வராஜ், ஸ்டீபன் ஆகியோர் இந்த முகாமில் முன்னிலை வகித்தனர்.


இந்த முகாமில் அறக்கட்டளை தலைவர் ஜான் வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமாருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக சக்கரை, ரத்த கொதிப்பு, பொது மருத்துவ பரிசோதனை பார்க்கப்பட்டு இலவசமாக ஊட்டச்சத்து உள்ள மருந்து மாத்திரை வழங்கி தடுப்பூசி போடப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.