சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் மொண்டியம்மன் நகரில் செங்குன்றம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நல சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இணைப்பு இணைந்து 46க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு கல்வி படிப்பிற்காக 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இலவச காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கல்வி காசோலையை சாரதி ஜெயின் ஃபவுண்டேஷன் அண்ட் டெஸ்ட் மூலமாக ஏற்பாடு செய்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு மாநிலத் தலைவர் டாக்டர் பி. சிம்மசந்திரன் வழங்கினார்.
இதில் செங்குன்றம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நல சங்கம் தலைவர் எம். தங்க பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் எம். சுப்பிரமணி, பொருளாளர் மற்றும் மாநில துணைச் செயலாளர் பி. ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஆடிட்டர் எஸ். மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் செயலாளர் எம் .சுப்பிரமணி அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது