திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக தார் சாலை, கழிவு நீர் கால்வாய், மின் விளக்கு, குடிநீர் வசதி, உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பருவ மழை துவங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் ஊராட்சி பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரி சுத்தப்படுத்தவும் , அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மல்லிமா நகரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய குளத்தை நவீனமான குளமாக மாற்றுதல் , கண்ணம்பாளையம், சிங்கிலி மேடு, உள்ளிட்ட பகுதிகளில் புதிய எரிமேடைகளை உருவாக்கி சுற்றுச்சுவர் கட்டுதல், விளாங்காடு பாக்கத்தில் உள்ள எரிமேடைக்கு புதிதாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கும், ஊராட்சி மன்றத்திற்கு புதிய அலுவலகம் கட்டுதல் , மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலைகளுக்கு புதிய ஆள்களை சேர்த்தல் , புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் அப்துல் ரசாக்,
திமுக புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெ. சரவணன், புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மம்மு, நாரவாரிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் மதுமிதா, கிராம நிர்வாக அலுவலர் சகாயமேரி, தலைமையாசிரியர் பிரபாகரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலாவதி நந்தகுமார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என். ஆனந்தி நாகராஜன். ,ர.தர்மிரவி. ஏ.எல்.மாரி, எஸ். அருணா தேவி சீனு, என். மாரியம்மாள் நரசிம்மன்,க. சத்தியசீலன்.மு. நிலவழகி இனியன், எஸ். ரதி சீனிவாசன், ஊராட்சி செயலர் கே. வி. மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.