.
விஜய்யின் தம்பி விக்ராந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவருடைய சித்தி மகன் தான் நடிகர் விக்ராந்த்.
இவர் தமிழில் வெளிவந்த முத்துக்கு முத்தாக, கெத்து, கோரிப்பாளையம், கவண் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி கடந்த வருடம் நடைபெற்ற சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
நடிகர் விக்ராந்த் பிரபல சீரியல் நடிகை மானசாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தனது இரு மகன்களுடன் விக்ராந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.