செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி 18-வது வார்டு எம்.கே. காந்தி தெருவில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்ப்பதற்காக புதிய மின் மாற்றி டிரான்ஸ்பார்மர் துவக்க விழா 18வது வார்டு பேரூராட்சி கவுன்சிலரும் வார்டு செயலாளருமான கே.கே.ராமன் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் கே.தமிழரசி குமார், பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், மின் வாரிய செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி செயற்பொறியாளர் நந்தினிதேவி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி 18-வது வார்டு மக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின் மாற்றி டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதில் கழக நிர்வாகிகள் பேரூர் அவைத்தலைவர் டி.அருள்தேவநேசன், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், கே.கபிலன், எஸ்.முனீஸ்வரி சுகுமார், மாவட்டப் பிரதிநிதி ஆர்.டி. சுரேந்தர் ஒன்றிய பிரதிநிதிகள் பி.அன்பு, ஏ.திராவிடமணி, ஆர்எம்பி. குமார், என்எம்டி. இளங்கோவன், ஜெ.ஜெய்மாறன், கவுன்சிலர்கள் கா.கு.இலக்கியன், லதா கணேசன், என்.சகாதேவன், வினோதினி பாலாஜி, கழக நிர்வாகிகள் ஜெ.செல்வக்குமார், கே.சுந்தரம், இ.பாலசுப்பிரமணியம், டி.காஜாமொய்தீன், எஸ்.வடிவேலு, ஆர்கேஎஸ்.சுரேஷ், என்.அப்துல் சமது, கே.வெங்கடேசன், கே.வாசுதேவன், வி.சங்கர், கே.ஜானகி, தாடி செல்வம், பி.எத்துராஜ், எஸ்.அன்புச் செல்வன், ஆர்.பாபு, ஜி.மதுரை வீரன், ஜி.மகேஷ், கே.ஹென்றி, வி.கணேசன், ஏழுமலை, ஜி.பொன்னரசி, இ.சுகாசினி, ஜி.முருகன், கே.முனுசாமி, பி.ஸ்ரீதர், ஜெ.முருகன், பி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
18வது வார்டில் நீண்ட நாள்களாக குறைந்த மின்னழுத்த பிரச்னையை இருந்து வந்தது. அதனை தீர்ப்பதற்காக புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம், பேரூர் கழக செயலாளர் ஜி.ராஜேந்திரன் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டது. இப்பிரச்னையை களைவதற்காக உடனடியாக தீர்வு கண்டு, புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது. இதற்காக ஒத்துழைத்த சட்டமன்ற உறுப்பினருக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் 18வது வார்டு கவுன்சிலர் கே.கே. ராமன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.