சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா செய்தியாளர்களிடம் சந்திப்பு

Spread the love

ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு மற்றவர்கள் மீது பழி போட்டு தப்பித்து கொள்ளாமல், விலைவாசியை குறைக்க நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.*

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி உயர்வை நடைமுறை படுத்தியிருப்பதை திரும்ப பெறவில்லை என்றால், மதுரையில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தன்று கடைகள் அடைக்கப்பட்டு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தென் சென்னை வடக்கு மாவட்ட கிளை சங்கமான கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தின் 32வது ஆண்டு விழாவை முன்னிட்டு சங்க தலைவர் ஆர் எம் பழனியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பின்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,. 75வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் இல்லங்கள் மற்றும் கடைகளில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி இருக்கின்றன.
அதை ஏற்று வணிக கடைகளிலும் இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றி வைக்கப்படும் என கூறினார்.

ஜிஎஸ்டி கூட்டத்தில், பால்,தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி 5% ஏற்றபட்டுள்ளது. இதை கண்டித்து தாங்கள் பல போராட்டங்களை நடத்தி வருவதாக கூறினார்.

மக்கள் தலையில் விலைவாசி உயர்வு விழக்கூடாது என்றால் ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகளை குறை செல்வதை ஏற்க முடியாது, இதை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

விலைவாசி உயர்வுக்கு வணிகர்களை குற்றம் சொல்வதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி உயர்வை நடைமுறை படுத்தியிருப்பதை திரும்ப பெறவில்லை என்றால், மதுரையில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தன்று கடைகள் அடைக்கப்பட்டு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.

மின் கட்டணம் உயர்ந்துள்ளது நிலையில், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு மின் துறையில் பல்வேறு சலுகை அளிக்கபட்டுள்ளது போல சிறு குறு துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள வியாபாரிகளுக்கும் சலுகைகள் அளிக்க வேண்டும் எனவும்
கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்த கூடிய மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக கூறினார் .

சந்தைகளுக்கு செல்லக்கூடிய பொருட்களுக்கு மட்டுமே அரசு செஸ் வரி வசூலிக்க வேண்டும் எனவும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செஸ் வரி வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த இருப்பதாகவும் கூறினார்.

ஜிஎஸ்டி வரி உயர்வை தீர்மானிப்பது ஜிஎஸ்டி கவுன்சில்தான் என மத்திய நிதி அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு, மற்றவர்கள் மீது பழி போட்டுவிட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தப்பித்துக் கொள்ளக் கூடாது, விலைவாசி உயர்வை குறைக்க நியாயமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

லூலு சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்றிருப்பதாகவும், சூப்பர் மார்க்கெட் வர்த்தகத்தால் சாமானிய வியாபாரிகள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்வு செய்து அந்த அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கு வழங்க இருப்பதாகவும் கூறினார்.

சாலையோர வியாபாரிகளிடம் ஒரு சிலர் லஞ்சம் பெறுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்திருப்பதாக கூறிய அவர், சாலையோர வியாபாரிகளிடம் முறையான வாடகை கட்டணம் வசூலித்தால், அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனவும் மேலும் லஞ்சம், மிரட்டல், ரவுடிசம் முழுமையாக குறைக்கப்படும் என தெரிவித்தார்.

சாலையோர வியாபாரிகளை மிரட்டி யாராவது லஞ்சம் பெறுவதாக தங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களை தமிழக அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய அவர், பணம் கிடைக்கிறது என்ற காரணத்தால் தேவையற்ற விளம்பரங்களில் நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் நடித்தால் அது நாட்டுக்கு செய்யும் துரோகம் என குற்றம் சாட்டினார்.

தாம் சோதனை செய்து பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமே அவர்கள் விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு குளிர்பானங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவற்றின் மீதுள்ள வரியை விலக்க வேண்டும் மத்திய மாநில அரசுகளை தாங்கள் வலியுறுத்தியிருந்ததாகவும், ஆனால் அது குறித்து அரசு இதுவரை? செவி சாய்க்கவில்லை, அப்படி செவி சாய்தால், வெளிநாட்டு குளிர்பானங்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என விக்கிரமராஜா கூறினார்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial