


சென்னை மதுரவாயில் அடுத்த வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகாடமியில் நடைபெற்ற நான்காம் ஆண்டு நீலா கேசவ் சுழற்கோப்பை விளையாட்டு போட்டி விழா ஜீலை 29 ஆம் தேதி 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்து போட்டி, 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எறி பந்து போட்டி விழாவினை பள்ளி தாளாளர் இராமதாஸ் சிறப்பான முறையில் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் இருந்து எமுபத்தைந்திற்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்.



வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அரை இறுதிப் போட்டிகள் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றன. மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாலை 4 மணி அளவில் சிறப்பு விருந்தினராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சிறப்புரையாற்றி வாழ்த்துக்கள் கூறி பரிசுகள் வழங்கினார்.


இதில் கால்பந்தாட்டத்தில் டான் பாஸ்கோ பள்ளி குழுவினர் முதல் பரிசாக சுழற் கோப்பையும், ரூபாய் 10,000 ரொக்க பரிசம் பெற்றனர். கால் பந்தாட்டத்தில் எஸ்சிஓஏ மெட்ரிக் பள்ளி குழுவினர் இரண்டாம் பரிசாக சுழற் கோப்பையும் ரூபாய் 7,000 ரொக்க பரிசு பெற்றனர். எறிபந்தாட்டத்தில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி குழுவினர் முதல் பரிசாக சுழற் கோப்பையும், ரூபாய் 10,000 ரொக்க பரிசம் பெற்றனர்.எறிபந்தாட்டத்தில் லிட்டில் ஃப்ளவர் பள்ளி குழுவினர் இரண்டாம் பரிசாக சுழற் கோப்பையும் ரூபாய் 7,000 ரொக்க பரிசு பெற்றனர்.