திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சோழவரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.இதில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் மீ.வே. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலசேகரன்,அமிழ்த மன்னன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை வைத்தனர். இதில் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் திட்ட இயக்குநர்/இணை இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை சோழவரம் ஊராட்சி ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் புல எண்.145/5ல் அமையவுள்ள எரிவாயு மயானம் (Gasfifer crematorium) அமைக்க ஊராட்சி ஒன்றியத்தில் தீர்மானம் வழங்க தெரிவிக்கப்பட்டது. எனவே மேற்படி மயானம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை சுற்றியுள்ள ஊராட்சிகளான பாடியநல்லூர் நல்லூர்,ஆங்காடு, கும்மனூர் , அலமாதி மற்றும் பூதூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பயன் பெறும் பொருட்டு பாடியநல்லூர் ஊராட்சியில் புல எண்.145/5ல் எரிவாயு மயானம் (Gasfifer crematorium) அமைக்க மன்றத்தின் ஒப்புதல் கோரப்படுகிறது. மற்றும் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் அரசு அனுமதி இன்றி கட்டியுள்ள கட்டிடங்களுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் புதிதாக கட்டவுள்ள கட்டிடங்களுக்கு முறைப்படி அரசு அனுமதி பெற வேண்டும் என்றும் இதனால் அரசுக்கு வருவாய் பெருக்கலாம் என்று ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கூறினர். இதை முறைப்படி செய்து தருவதாக ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன் உறுதி அளித்தார். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் எம்.கர்ணன், சுகவேணி முருகன், பாஸ்கரன், மாலதி மகேந்திரன், ரேவதி துரைவேல், ரவிச்சந்திரன் ருக்மணி ,கோமதி சீனிவாசன். சசிகலா சகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.