செங்குன்றம் பேரூர் திமுக கழக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு 7வது, 8வது வார்டில் ஏழை எளிய மக்கள் 1000க்கும் மேற்பட்டோர்களுக்கு அரிசி தாய்மார்களுக்கு புடவை பிரியாணி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ். சுதர்சனம் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு னமலர் தூவி மரியாதை செலுத்தி திமுக கழக கொடி ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 7வது வார்டு செயலாளர் இ. சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மாணவர் அணி அமைப்பாளர் எம். மோகன் குமார் வரவேற்புரை ஆற்றினார். கழக துணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் எஸ். முனீஸ்வரி சுகுமார் முன்னிலை வகித்தார். இதில் வார்டு நிர்வாகிகள் இ.மோகன் ,இ.உமாதி,எம்எஸ்கே. யுவராஜ், கே. மகேந்திரன், கே.தமீம் அன்சாரி, எம். சுமித்ரா மகேஷ், எ.தனசேகர்,பி.வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேரூர் கழக செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஜி. ராஜேந்திரன் , பொதுக்குழு உறுப்பினர் ஜெ. ஜெய் மதன், பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், பேரூராட்சித் துணைத் தலைவர் ஆர் இ ஆர். விப்ர நாராயணன், அவைத்தலைவர் ஜெ. ரகு குமார், துணை செயலாளர் டி.அருள் தேவநேசன், ஒன்றிய பிரதிநிதிகள்.ஏ. கோபால்,கே.கபிலன், கே. சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
8வது வார்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் 8வது வார்டு செயலாளர் சி. ஏழுமலை தலைமை தாங்கினார். பேரூர் துணைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் 8வது வார்டு நிர்வாகிகள் பி. அன்பு, என். கோபி, நூருல்லா, கே. வாசுதேவன் ஜெய் புன்னிசா, எஸ். முனுசாமி, எஸ். விக்னேஷ், எம். மோகன், சி. மணிகண்டன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் பலர் உடன் இருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.