கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ஹோட்டல் ராயல் ப்ளாசாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கண் மருத்துவர் கோமதி, ஏசி சங்கம் பிரசிடெண்ட் சிவகுமார் குத்துவிளக்கேத்தி கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் ஒன்றாக செயல்படுவோம் என்ற பெயர் பலகை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.இதில் கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் ஃவுண்டேர் அண்ட் மேனேஜிங் டிரஸ்டி ராஜேந்திரன் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் ராஜேந்திரன் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் சென்னை வளசரவாக்கத்தில் இயங்கி வருகிறது . இந்த டிரஸ்ட் எதற்கு என்றால் ஏசி டெக்னீசியன் களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இந்த ட்ரஸ்டில் என்ன சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் ஏசி டெக்னீசியன் ஏசி பழுது பார்க்கும் இடத்தில் ஏதேனும் பொருள் தேவைப்பட்டால் உதவுவதற்காகவும் ஏசி டெக்னீசியன் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் வேலை செய்யும் இடத்தில் விபத்து நேரிட்டால் முதல் உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. எங்கள் குழுவில் இணைந்தவர்களுக்கு எங்கள் குழு மூலமாக அந்தந்த பகுதிகளில் ஏசி பழுது பார்க்கும் வேலை தரப்படும். மற்றும் பல்வேறு வகையான சலுகைகள் கிவர்ஸ் கெயின் ஏசி டீம் ட்ரஸ்டில் உள்ளதாக தெரிவித்தார்.இதில் அமைப்பாளர் கண்ணன் , ஒருங்கிணைப்பாளர் சதீஷ் மற்றும் உறுப்பினர்கள் வெகு சிறப்பாக இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது