திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் வீரா புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மா பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா
மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர். திவாகரன் ,ஆலய நிர்வாக தலைவர் ஆதிகேசவலு , மற்றும் முனுசாமி நாயுடு கோதண்டபாணி , ஊராட்சி துணைத் தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆலய பொறுப்பாளர்கள் ரஜினா ஆவின கிருஷ்ணன், கீதா, கண்ணன், லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் திருமுறை பாராயணம், வேதபாராமாயணம், கோ பூஜை, வேதா அனுக்னஞ் விக்னேஷ் வர பூஜை, புண்யாஹவசம், கணபதி ஹோமம், தன பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவகிரக பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், அஷ்ட மருந்து, முதல் நான்கு கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கும்ப கலசங்களை மேளதாளத்துடன் ஆலய மாட வீதியாக சென்று அனைத்து விமானம் மற்றும் ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ மகேஸ்வரி அம்பாள், சமேத, ஶ்ரீ மஹஷ்வரர், ஸ்ரீ தண்டாயுதபாணி, ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ லக்ஷ்மி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ ஆஞ்சநேயர் நவகிரகங்கள் விநாயகர் பைரவர் வாராஹி , நாகர்கள், மற்றும் ஸ்ரீ மௌனகுரு சாமி தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர் இதனைத் தொடர்ந்து உற்சவருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பித்து மேளதாள வான வேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்வில் விழாக் குழுவினர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம பொதுமக்கள். பக்த கோடிகள் மற்றும் ஆலய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாத பை மற்றும் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது