வருவாய் ஆய்வாளர் மதன் சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உதவியுடன் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரஉதவியுடன் அகற்றி நிலத்தை மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஓரக்காடு ஊராட்சியில்
அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் 14.5 ஏக்கர் நிலத்தை ஜெயா சோப் வொர்க் தனியார் நிறுவனம் போலி
பட்டா மூலம் ஆக்கிரமித்துள்ளதாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர்
லட்சுமணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நீலா சுரேஷ் ஓரக்காடு ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர் எஸ்.வேலு, எம். திருமால் எஸ். ராஜா, பாபு, கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஏழுமலை ஆகியோர் தீர்மானம் இயற்றி உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சியின் மூலம் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியரின் விசாரணைக்குப் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் பாதுகாப்புடன் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடம் மீட்கப்பட்டு எச்சரிக்கை பெயர்பலகை நடப்படடது