தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை, உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022 ஆம் ஆண்டுக்கான காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் சோழவரம் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரம் காய்கறி விதைகள் மற்றும் செடி வகைகள் எலுமிச்சை நெல்லிக்காய் தென்னை கன்று என பல்வேறு செடிகள் மற்றும் பூச்சி மருந்து தெளிப்பு, பாசிபயிர், மண்புழு உரம் ஆகியவற்றை இலவசமாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ். சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது. இதில் சோழவரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் மீ.வே.கர்ணாகரன் சோழவரம் ஒன்றிய அவைத்தலைவர் அ.காசிம் முகமது. அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் கே.தமிழ்வாணன். அலமாதி ஊராட்சி துணைத் தலைவர் ஜெயலட்சுமி முனுசாமி, வார்டு உறுப்பினர்கள் லட்சுமி மோகன், ரகு, சந்திரன் மற்றும் அரசு வேளாண்மை துறை உதவி இயக்குனர் ரமேஷ், துணை வேளாண்மை அலுவலர் செந்தில் முருகன், தொழில்நுட்ப வேளாண்மை இயக்குனர் மனோகரன் தோட்டக்கலை துறை சார்ந்த அதிகாரிகள் நந்தினி, ஜெயபிரகாஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்