தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேளாண்மை உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021 2022 ஆம் ஆண்டுக்கான காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் சோழவரம் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பு பச்சைப்பயிறு பழ மரக்கன்றுகள் தென்னங் கன்றுகள் மண்புழு உரம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது இதில் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் மொழி அரசி செல்வம் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் வ. எல்லையன், உதவி விதை அலுவலர் பா. ஜெயவேலு, உதவி தோட்டக் கலைத் துறை அலுவலர் மஞ்சுளா, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் புவனேஸ்வரி, கால்நடை மருத்துவர் சித்ரா, மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்