
அருள்மிகு சிவ சுடலை மாடசாமி பொன் இசக்கியம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை விழா திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் ஆரிக்கம்பேடு பவானி நகரில் அமைந்துள்ள அருள்மிகு சிவ சுடலை மாடசாமி பொன் இசக்கியம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயிலில் செந்தமிழ் ஆகம அந்தணர் சிவ.து.சுரேஷ்குமார் தலைமையில் சித்திரை மாத அமாவாசை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அருள்மிகு சிவ சுடலை மாடசாமி பொன் இசக்கியம்மன் மற்றும் எல்லை அம்மனுக்கு படையல் வைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது