.
சென்னை செங்குன்றம் ஓஆர்ஜி என்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சி.பா.ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடம் சார்பில் சிலம்ப ஆசான் ராஜமகாகுரு. பி.எஸ். ரத்தினசாமியின் 38-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிலம்ப குழு போட்டி சிலம்ப தலைமை பயிற்சியாளர். ஆர். முருககனி தலைமையில் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் பவர்.பாண்டியன்ஆசான். மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ். நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர். தமிழரசி குமார். துணைத்தலைவர். ஆர்.விப் ரநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு சிலம்ப ஆசான் ரத்தினசாமியின் திருஉருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தி போட்டியை துவக்கி வைத்தனர். இப்போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அளவில் பல சிலம்ப குழு வீரர்கள் கலந்துகொண்டனர்.
போட்டியில் ஆரம்பாக்கம் எம் ஜி ஆர் சிலம்ப கலைக்கூடம் முதலிடம்பெற்றது. பழவேற்காடு உழைக்கும் கரங்கள் எம் ஜி ஆர் சிலம்ப கலைக்கூடம் இரண்டாம் இடம் ஆவடி நடராஜன் சிலம்ப அகடமி மூன்றாம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற சிலம்ப குழு வீரர்களுக்கு அம்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர். செல்வ கணேசன். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர். நரசிம்மராவ். செங்குன்றம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர். ரமேஷ் மற்றும் திரைப்பட இயக்குனர். ரத்னகுமார் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
இதில் மூத்த ஆசான்கள் எம்.ராஜா.எஸ். துரை, எஸ்.நடராஜன், மாவட்ட நிர்வாகிகள். எஸ்.ராஜா, ஜெ.ரஜினி, எம்.பாஸ்கர் மற்றும் சிலம்ப குழு வீரர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஜெ.முகம்மது அப்துல் காதர். எம். ரத்தினலோகேஷ் நன்றி கூறினர்.