பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் தைமாத சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து உலக மக்கள் மீண்டு வரவும் உலக நன்மை வேண்டி சித்தர்கள் அடியான் குருஜி ஜெ. பூபாலன் தலைமையில் தை மாத சனிப் பிரதோஷம் வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் சிவபெருமானுக்கு 18 சித்தர்களுக்கும் பால், தயிர் ,தேன், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவபெருமானுக்கும் உற்சவர் சிவபெருமான் பார்வதிக்கும் ,18 சித்தர்களுக்கும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் கலந்து கொண்ட பக்தர்கள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என உச்சரித்தபடி சாமி தரிசனம் செய்தும் அவரவர் கோரிக்கையை ஏற்றார் போல் அர்ச்சனை செய்தும் அகல் விளக்கேற்றி நேற்றி கடனைப் பூர்த்தி செய்தனர். முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது