திருநிலை ஊராட்சியில் நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் திருநிலை காலனியில் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி ஜால் ஜீவன் மிஷன் கன்வரன்ஸ் 2020-2021 கொள்ளளவு 60000 லிட்டர் மதிப்பீடு 21,56 அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், சோழவரம் ஒன்றிய தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், திமுக சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மேளதாளங்கள் முழங்க சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று நீர்த்தேக்கத் தொட்டியை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்.
பின்னர் ஏழை எளிய மக்களுக்கு மதியம் அன்னதான உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தனசேகர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ரேவதி ஜான்சன், கவிதா வெங்கடேசன் தலைமையிலும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆஷா பிரதாப், பிரகதி வின்னரசு, பூபதி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திருநிலை கிராம நிர்வாக அலுவலர் மதன் ராஜ், ஊராட்சி செயலாளர் கோபி ஆகியோர் உட்பட ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.